புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை, உலகின் 250 சிறந்த பசுமை மருத்துவமனைகளின் பட்டியலில் இடம்பெற்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
நியூஸ்வீக் மற்றும் ஸ்டாட்டிஸ்டா வெளியிட்டுள்ள வேர்ல்ட்ஸ் க்ரீனெஸ்ட் ஹாஸ்பிட்டல்ஸ் 2026 தரவரிசையில் இடம்பெற்றுள்ள மலேசியாவின் ஒரே மருத்துவமனை இதுவாகும்.
புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான ஸ்டீவன் சிம், இந்த சாதனை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ். பிரசாந்த் தலைமையிலான மருத்துவமனை ஊழியர்களின் தொடர்ச்சியான முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டில், ஆசிய அளவிலான மோஸ்ட் சஸ்டைனபிள் ஹாஸ்பிட்டல் 2025 போட்டியில் இந்த மருத்துவமனை தங்க விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
36 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளை பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது மலேசியாவின் பசுமை மருத்துவச் சேவைக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.








