Sep 15, 2026
Thisaigal NewsYouTube
கசானா துணை நிறுவனத்தில் முறைகேடு சந்தேகம் — முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

கசானா துணை நிறுவனத்தில் முறைகேடு சந்தேகம் — முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

Share:

கசானா நேஷனல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமொன்றில் நிதி அல்லது நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முழுமையான விசாரணை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

நிதி அமைச்சருமான அன்வார், கசானாவின் கீழ் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாகம் குறித்து அண்மையில் கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்களுடனான ‘தேமு அன்வார் ’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரே கசானாவின் தலைவராக இருந்தாலும், நிர்வாக விதிமீறல் இருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறுதியாகக் கூறினார்.

இன்று காலை நடைபெற்ற கசானா இயக்குநர் குழுக் கூட்டத்திலும், சந்தேகத்திற்குரிய அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய கசானா நிர்வாகம் நல்ல நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும் அன்வார் பாராட்டினார்.

Related News