Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் மனித உருவ ரோபோ! பயணிகளுக்கு வழிகாட்டும் ‘ஒல்லி’
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் மனித உருவ ரோபோ! பயணிகளுக்கு வழிகாட்டும் ‘ஒல்லி’

Share:

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா எம்ஆர்டி ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு வழிகாட்டவும் பயணத் தகவல்களை வழங்கவும் மனித உருவ ரோபோ ஒன்று சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

‘ஒல்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11 வரை Downtown Line ரயில் வழித்தடத்தில் உள்ள லிட்டில் இந்தியா நிலையத்தில் சோதனை செய்யப்படவுள்ளது.

வார நாட்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, இந்த ரோபோ பயணிகளுக்கு வழிகாட்டுவதுடன், ரயில் சேவை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் தரைப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், ரோபோ தனியாக இயங்காது; அதிகாரிகள் குழு எப்போதும் அதனுடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடும்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து