Sep 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 9-இல் ஆன்லைன் ரஹ்மா விற்பனை
தற்போதைய செய்திகள்

மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 9-இல் ஆன்லைன் ரஹ்மா விற்பனை

Share:

மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி “ஜுவாலான் இஹ்சான் ரஹ்மா 9.9” என்ற சிறப்பு ஆன்லைன் விற்பனை நடத்தப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற தி சமிட் மலேசியா 2026 எனும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வாங்க மலேசியர்களுக்கு இந்த ஆன்லைன் விற்பனை வாய்ப்பளிக்கும் என்றார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ரஹ்மா விற்பனைத் திட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களுக்கு 10 முதல் 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மக்கள் நேரடியாகப் பயனடையும் வகையில், இந்த புதிய ஆன்லைன் விற்பனைத் திட்டம் குறித்து பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Related News