Sep 15, 2026
Thisaigal NewsYouTube
புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் கரும்புகை — புறப்பாடு திடீர் ரத்து
தற்போதைய செய்திகள்

புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் கரும்புகை — புறப்பாடு திடீர் ரத்து

Share:

ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் புறப்பாட்டை ரத்து செய்தது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி 10.40 மணியளவில் ஓடுபாதையை நோக்கி விமானம் நகர்ந்தபோது, அதிலிருந்து கரும்புகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஓடுபாதையும் தற்காலிகமாக மூடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விமானத்தில் இருந்த 160 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Related News