Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு — சுத்தியல்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு — சுத்தியல்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

Share:

கிள்ளான், தெங்கு கிளானா சாலையில் அமைந்துள்ள இந்தியர்களின் வணிக வளாகமான லிட்டில் இந்தியாவில் இன்று மதியம் தங்க நகைக்கடையொன்றில் துணிகர கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த குறைந்தது நான்கு கொள்ளையர்கள், பெரிய சுத்தியல்களுடன் கடைக்குள் புகுந்து, கண்ணாடி காட்சிப்பெட்டிகளை உடைத்து நகைகளை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

சில நிமிடங்களிலேயே கொள்ளையை முடித்த அவர்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் குறித்து போலீஸ் துறை இன்னும் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது,

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து