டுங்குன், செப்டம்பர்.01-
டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹசான் முகமட் ரம்லிக்குச் சொந்தமான வாகனம் ஒன்று தீயில் சேதமுற்றது.
இன்று மதியம் 12.47 மணியளவில் கிழக்குகரையின் LPT2 நெடுஞ்சாலையில் கோல திரங்கானு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதில் டொயோட்டா வெல்ஃபயர் வாகனம் 95 விழுக்காடு சேதமுற்றதாக கெர்தே தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி ரொஹாயா ஜாமில் தெரிவித்தார்.
இந்த தீச் சம்பவத்தில் ஓர் ஆடவரும், ஒரு பெண்ணும் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.








