Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய ஆடவர் கைது

Share:

ஈப்போ, க்ளெபாங், ஐன் க்ளெபாங் பேரங்காடி மையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பொய்யான அழைப்பை விடுத்து மிரட்டியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டமிக்க அந்த பேரங்காடியில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய அந்த ஆடவர், அடுத்த ஐந்து மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு 9.30 மணியளவில் ஈப்போ அருகில் தாசேக் கில் அந்நபரின் வீட்டில் அந்த சந்தேகப் பேர்வ​ழி வளைத்துப்பிடிக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த பேரங்காடியில் வெடிகுண்டு இருப்பதாக அனாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்து மிரட்டிய நபர், தாம் என்பதை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக யஹாயா ஹாசன் குறிப்பிட்டார். பொது மக்களை அச்சுறுத்தும் தோரணையில் செயல்பட்ட அந்த நபர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு குற்றவியல் சட்டம் 507 பிரி​வின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த வெடிகுண்டு புரளியினால் நேற்று அந்த பேரங்காடி யைமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், அதன் வர்த்தகம் நிலைக்குத்தியது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மக்கள்​ அனைவரையும் அந்த பேராங்காடியை விட்டு வெளியேற்ற வேண்டிய ஓர் இக்கட்டான நிலைக்கு ஐன் க்ளெபாங் பேரங்காடி மையம் இலக்கானதாக யஹாயா ஹாசன் மேலும் கூறினார்.

Related News