ஜோகூர் பாரு, செப்டம்பர். 17-
ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்காரோ அருகே நேற்று, பெரோடுவா அல்ஸா இரக வாகனத்தினுள் இறந்த நிலையில் புலியின் உடல் ஒன்று கைப்பற்றப்பட்டதையடுத்து, 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், 28 வயது முதல் 49 வயது மதிக்கத்தக்க அம்மூவரையும், ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

மீட்கப்பட்ட அப்புலி மலாயன் வகையைச் சேர்ந்தது என்றும், அதன் உடம்பில் 6 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்களும், கண்ணிகளால் ஏற்பட்ட காயங்களும் இருந்ததாக மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இனி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.








