கோலாலம்பூர், செப்டம்பர்.13-
வெளிநாட்டவர் ஒருவருக்கு, மலேசியா மை செகண்ட் ஹோம் என்ற விசா தொடர்பான பயண ஆவணங்களை, போலியாக தயாரிக்க உதவிய குடிநுழைவு அதிகாரி ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 150,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 51 வயதான அந்த அதிகாரி, கடந்த 2022 ஆம் ஆண்டு, புத்ராஜெயாவில் இக்குற்றத்தைப் புரிந்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹாமிட் முன்னிலையில் நேற்று அவர் மீதான குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இத்தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








