சிலாங்கூர்,செர்டாங், தாமான் புக்கிட் செர்டாங் கில் கோணிப்பையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலோகம் மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலையின் பழைய இரும்புப்பொருட்களை விலைக்கு வாங்கும் முதலாளி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர் பெண்கள் ஆவர். நேற்று மதியம், பழைய இரும்புப்பொருட்கள் கொட்டி வைக்கப்பட்ட வளாகப்பகுதியில் கோணிப்பையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட நபர், ஸ்ரீ கெம்பாங்கானைச் சேர்ந்த 41 வயதுடைய அந்நிய நாட்டவர் ஆவார் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த இரும்புக்கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்த அந்த அந்நிய நாட்டவர்,தாம் வேலை செய்து வந்த இடத்தில் ஒரு பெரும்தொகையை கையாடல் செய்ததைத் தொடர்ந்து அந்த நபர், முதலாளியினால் அடைத்து வைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் 58 க்கும் இடைப்பட்ட வயதுடைய முதலாளி உட்பட இதர பத்து நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏ.ஏ. அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


