Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வர்ததகரின் மனைவி கடத்தல், போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

வர்ததகரின் மனைவி கடத்தல், போலீசில் புகார்

Share:

சாலை நிர்மாணிப்புத்திட்டம் ஒன்று பாதி வழியிலேயே கைவிடப்பட்டு விட்டதால் ஏற்பட்ட தகராற்றில் வர்த்தகர் ஒருவரின் அண்டை நாட்டைச் சேர்ந்த மனைவி, அண்மையில் கும்பல் ஒன்றினால் சிலாங்கூரில் கடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போலீசார் தெரிவித்தனர்.

எனினும் சிலாங்கூர், பினாங்கு மாநில போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த வர்த்தகரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

அந்த வர்த்தகரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News