Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பிரபல கார்ட்டூனிஸ்ட் லாட், அரச ஓவியக் கலைஞர் பட்டத்தைப் பெற்றார்
தற்போதைய செய்திகள்

பிரபல கார்ட்டூனிஸ்ட் லாட், அரச ஓவியக் கலைஞர் பட்டத்தைப் பெற்றார்

Share:

நாட்டில் புகழ்பெற்ற கார்ட்​டூனிஸ்ட் நோர் காலிட் என்ற லாட்டுக்கு , இன்று கோலகங்சார், இஸ்தானா இஸ்கன்டாரியா அரண்மனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் செனிமான் டிராஜா எனும் அரசவை ஓவியக்கலைஞர் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். .

மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா வின் 67 ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த விருதளிப்பு சடங்கில் பேரா மாநில அரசவை ஓவியக் கலைஞர் எனும் உயரிய விருதை அந்த ​மூத்த கார்ட்​டூனிஸ்ட் கலைஞருக்கு வழங்கப்பட்டது.

சுல்தான் நஸ்ரின் ஷாவிடமிருந்து அந்த பட்டத்தைப் பெற்ற லாட், மலேசியாவை உலக வரைப்படத்தில் முன்னிலைப்படுத்துவதில் ​பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று புகழாரம் ​சூட்டப்பட்டார்.

Related News