கோலாலம்பூர், ஜூலை.31-
அடுத்த ஐந்து ஆண்டுக்குள் அதாவது வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருவாரியாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாடு, 2030 ஆண்டில் கால் பதிக்கும் போது, அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டினர் மட்டுமே இருப்பர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது நாட்டில் மொத்த ஆள் பலத்தில் பத்து விழுக்காட்டினர், அந்நியத் தொழிலாளர்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








