நாட்டில் சுகாதார பராமரிப்பு சேவைகள் மற்றும் வசதிகள் அனைவருக்கும் சென்று சேர்வதும், மக்கள் அதைப் பெற்று பயனடைவதும் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை அறிக்கையில் கண்டறியப்பட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு, நாட்டின் சுகாதார பராமரிப்பு முழுமையாக சீர்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க மருத்துவத்துறையும், தனியார் மருத்துவத்துறையும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் ஓர் அங்கமாக எஸ்.பி.எம் எனப்படும் சிவில் மருத்துவத் திட்டம் மருத்துவத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசாங்க மற்றும் தனியார் மருத்துவத்துறை பங்கேற்கும் வகையில் இத்திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளில் மக்கள் நெரிசலை குறைக்க குறிப்பாக பி40 அடிதட்ட மக்கள் ஜிபி எனப்படும் தனியார் மருத்துவ கிளினிக்குகளில் இலவச மருத்துவ சேவையை பெற இத்திட்டம் வகை செய்யும் என்று அமைச்சர டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெளிவுபடுத்தினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


