நாட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் மாணவர் நெரிசலை அறிந்துகொள்வதற்கும் புதிய இணையத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'செகோலாகூ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தளத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் ஆகியோர் முன்னிலையில் இத்தளம் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிகளின் அமைவிடம், மாணவர் சேர்க்கை விவரங்கள், காலியிடங்கள், இருமொழிக் கல்வித் திட்டம் உள்ளிட்ட தகவல்களையும் பெற்றோர்கள் ஒரே தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
சபா, சரவாக் உள்ளிட்ட கிராமப்புறப் பள்ளிகளின் விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த இணையத் தளம் பெற்றோர்களின் சிரமத்தைக் குறைப்பதுடன், அரசின் டிஜிட்டல் சேவைகளையும் மேம்படுத்தும் என அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








