கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் மூன்று இந்திய ஆடவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் வழக்கு நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டிருப்பதால், விசாரணைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, விசாரணைக்கான தேதியைப் பெற புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி மலாக்கா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இதுவரை பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மறுஆய்வு செய்யப்பட்டதுடன், சட்டத்துறை தலைமை அலுவலகமாக ஏஜிசி வழங்கிய கூடுதல் அறிவுறுத்தல்கள் மற்றும் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே மரண விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதாக, நேற்றைய தேதியிட்ட நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார.








