Nov 3, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்

சிலாங்கூர் மாநிலம், சுங்கை பூலோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கம்போங் மெலாயு சுபாங் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, கம்போங் மெலாயு சுபாங் பகுதியில் உள்ள டேவான் சியாந்தான் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிவாரண மையம், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான தங்குமிட வசதிகளும் உதவிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செயல்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், மனித வள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் நேற்று இரவு தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையம் தன்னார்வலர்களுடன் இணைந்து, பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம், ஷா ஆலாம் மாநகராட்சி மன்றம், சமூக நலத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →