Nov 3, 2026
Thisaigal NewsYouTube

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

மலேசியாவில் திரவ நிக்கோட்டினை மீண்டும் நச்சுப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியான தகவல்கள் குறித்து சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் விளக்கமளிக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கமான எம்எெமெ வலியுறுத்தியுள்ளது.

இந்த முன்மொழிவை சுகாதார அமைச்சர் முன் வைத்துள்ளதாகவும், அதற்கு நச்சுப் பொருட்கள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக எம்எம்எ தலைவர் டாக்டர் எல் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விலக்குக்கான பொது சுகாதார அடிப்படையிலான காரணங்களை சுகாதார அமைச்சர் உடனடியாக விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →