Nov 4, 2026
Thisaigal NewsYouTube

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் மலேசியாவிற்கு இல்லை என்றும், அவ்வாறு ஒப்படைப்பதாக எந்தவோர் உறுதிமொழியும் வழங்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவானது, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் 6-ஆவது பிரிவு மற்றும் 1992-ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் ஸாகிர் நாயிக்கை Zப்நாடு கடத்துவதற்கான இந்தியாவின் முந்தைய அதிகாரப்பூர்வ கோரிக்கையானது கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி மலேசியாவுக்குக் கிடைத்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யக் கோரும் இந்திய அரசாங்கத்தின் தூதரகக் குறிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி பெறப்பட்டதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது, டாக்டர் ஸாகிர் நாயிக்கை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவிடமிருந்து புதிதாக எந்தவொரு கோரிக்கையும் மலேசிய அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை என்றும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்தவோர் உறுதிப்பாடும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் தமது எழுத்துப்பூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பெங்காலான் செப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மாட் மர்ஸுக் ஷாரி, இந்தியா முன்வைத்த நாடு கடத்தல் கோரிக்கையின் தற்போதைய நிலை என்ன? மேலும் இந்தியா சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மலேசியச் சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளனவா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →