Nov 4, 2026
Thisaigal NewsYouTube

தெலுக் இந்தானில் கடை முன்பு ஆடவர் வெட்டிக் கொலை – 27 வயது பெண் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெலுக் இந்தானில் கடை முன்பு ஆடவர் வெட்டிக் கொலை – 27 வயது பெண் கைது

பேராக் மாநிலம், தெலுக் இந்தான், தாமான் பஞ்சார் ஜெயா பகுதியில் கடை ஒன்றின் முன்பாக 48 வயது ஆடவர் மூன்று பேரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நேற்று நவம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 3.53 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கோக் லியான் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவத்தின் போது வெட்டுக் கத்திகளுடன் வந்த மூன்று ஆடவர்கள் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த நபரை தெலுக் இந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ரேபிட் பினாங்கு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் பலி

ரேபிட் பினாங்கு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் பலி

நஜிப் ரஸாக்கின் அபராதத்திற்கான நிதி திரட்டும் முயற்சி இலக்கை இன்னும் எட்டவில்லை

நஜிப் ரஸாக்கின் அபராதத்திற்கான நிதி திரட்டும் முயற்சி இலக்கை இன்னும் எட்டவில்லை

நாட்டில் கோரப்படாத பணம் 14 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியது! உரிமைக்குரியவர்கள் உடனடியாகச் சரிபார்க்க வலியுறுத்தல்

நாட்டில் கோரப்படாத பணம் 14 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியது! உரிமைக்குரியவர்கள் உடனடியாகச் சரிபார்க்க வலியுறுத்தல்

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் லாரி – கார் மோதல்; 7 கி.மீ. போக்குவரத்து நெரிசல்

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் லாரி – கார் மோதல்; 7 கி.மீ. போக்குவரத்து நெரிசல்

டாக்டர் ஸாகிர் நாயக் ஏன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை? அவருக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் செலவுகளை யார் ஏற்கின்றனர்? – ராயர் கேள்வி

டாக்டர் ஸாகிர் நாயக் ஏன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை? அவருக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் செலவுகளை யார் ஏற்கின்றனர்? – ராயர் கேள்வி

முதலீட்டு மோசடியில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு

முதலீட்டு மோசடியில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு