சமயப் போதகர் டாக்டர் ஸாகிர் நாயக்கை இந்தியாவுக்கு ஏன் நாடு கடத்தவில்லை என்றும், அவர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கான செலவுகளை யார் ஏற்கின்றனர் என்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போது மக்களவையில் பேசிய அவர், புத்ராஜெயாவில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஸாகிர் நாயக் வசிப்பதாகவும், அவர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தனிப்பட்ட பாதுகாவலர்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அவர்களுக்கான செலவுகளை அரசாங்கமே ஏற்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு கோத்தா பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களின் விசுவாசம் குறித்து ஸாகிர் நாயக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் ராயர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில், ஸாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.








