அனைவருக்கும் சந்தை விலையின் அடிப்படையில் எரிபொருள் விற்பனை செய்வதற்குப் பதிலாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியத் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என நிதியமைச்சின் இரண்டாம் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் மற்றும் அடுத்த ஆண்டு உலகச் சந்தையில் எண்ணெய் விலை எவ்வாறு அமையும் என்ற நிச்சயமற்ற சூழலிலும், மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கொள்கை தொடரும் என அவர் கூறினார்.
அனைத்துலக நாணய நிதியம் உள்ளிட்ட சில தரப்புகள் எரிபொருள் மற்றும் மின்சார விலைகளைச் சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கப் பரிந்துரைத்துள்ளன.
இருப்பினும், இந்த அணுகுமுறையை மடானி அரசாங்கம் ஏற்கவில்லை என்றும், மானியக் கசிவுகளைத் தடுப்பதுடன், வெளிநாட்டினர் மானியங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் -இல் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் குழுநிலை நிறைவுரையின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.








