சமயச் சட்டங்களுக்கு முரணான சடங்குகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையால் கைது செய்யப்பட்ட 21 வயது ஆடவர், நாளை ஷரியா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 10 மணிக்கு, ரவாங் குவாங் ஷரியா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சிலாங்கூர் சமய இலாகா தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் ஷரியா குற்றவியல் சட்டம் 1995-இன் பிரிவு 4-இன் கீழ் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கோலாலம்பூரில் 21 வயது ஆடவரும் அவரது 52 வயது தாயாரும் விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்டதாக ஜாயிஸ் (JAIS) இயக்குநர் தெரிவித்து இருந்தார்.








