Nov 3, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோ, சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்: 700 மில்லியன் ரிங்கிட் நிதியில் பணிகளை விரைவுபடுத்த அன்வார் உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோ, சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்: 700 மில்லியன் ரிங்கிட் நிதியில் பணிகளை விரைவுபடுத்த அன்வார் உத்தரவு

சிலாங்கூரில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க, சுங்கை பூலோ மற்றும் சுங்கை டாமான்சாரா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 700 மில்லியன் ரிங்கிட் செலவிலான இந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆற்றுப் படுகைகளை ஆழப்படுத்துதல், ஆறுகளை அகலப்படுத்துதல், கூடுதல் நீர்த்தேக்கக் குளங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளைத் தாமதமின்றி மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடும் மழையின் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் சுங்கை பூலோ, கம்போங் மெலாயு சுபாங்கில் உள்ள டேவான் சியாந்தான் வெள்ள நிவாரண மையத்தில் தங்கியிருப்பவர்களை இன்று நேரில் சென்று சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு முதல் மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், விரிவான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, மத்திய அரசின் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கையை வரும் வெள்ளிக்கிழமை பெறவுள்ளதாகவும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத் திட்டங்கள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டாக்டர் ஸாகிர் நாயக் ஏன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை? அவருக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் செலவுகளை யார் ஏற்கின்றனர்? – ராயர் கேள்வி

டாக்டர் ஸாகிர் நாயக் ஏன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை? அவருக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் செலவுகளை யார் ஏற்கின்றனர்? – ராயர் கேள்வி

முதலீட்டு மோசடியில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு

முதலீட்டு மோசடியில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம் தொடரும் – அமீர் ஹம்ஸா

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம் தொடரும் – அமீர் ஹம்ஸா

வேறு சமயச் சடங்குகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்

வேறு சமயச் சடங்குகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பெயர், சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பெயர், சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மறுப்பு

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மறுப்பு