மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் (LLM), பெயர் மற்றும் சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் தரப்பினரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது நிறுவனத்தின் பெயரில் பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் ஆவணங்களுக்கும் வாரியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்எல்எம் நிறுவனத்தின் சின்னத்தைக் கொண்டுள்ள அட்டைகள், ஆவணங்கள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றை நம்ப வேண்டாம் என்றும், அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நபர்களுக்கு எந்தவிதப் பணப் பரிமாற்றமும் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








