வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தைத் தொடர்ந்து, தெற்கு நோக்கிய அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டதால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று மாலை 5.03 மணியளவில், குளுவாங் பகுதியில் நெடுஞ்சாலையின் 50.4ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தைத் தொடர்ந்து அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டதாக பிளஸ் நெடுஞ்சாலைத் தகவல் மையம் உறுதிப்படுத்தியது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி அஸ்மிஸா ஸைனி தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விசாரணை முடிவடைந்த பின்னர் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என மாவட்ட போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.








