நாட்டில் இதுவரை உரிமை கோரப்படாமல் இருக்கும் பணத்தின் மதிப்பு 14 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, தேசிய கணக்காய்வுத்துறையில் 14 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான கோரப்படாத பணம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களிடையே இத்தகைய பணம் இருப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமை, தங்களுக்குப் பணம் கோரும் உரிமை இருப்பதை அறியாதது, பழைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களால் உரிமைக்குரியவர்களைக் கண்டறிய முடியாதது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பொதுமக்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை எளிதாகச் சரிபார்த்து மீட்டெடுக்க இ-குமிஸ் (eGUMIS) இணையவழி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டு அக்டோபர் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் கோரப்படாத பணம் தொடர்பாக 176 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








