பினாங்கு மாநிலம், பாயான் பாரு, ஜாலான் மாயாங் பாசீர் பகுதியில் நேற்று இரவு 11.33 மணியளவில் ரேபிட் பினாங்கு பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் காயமடைந்தனர்.
விபத்தின் போது பேருந்தில் 8 பயணிகள் இருந்த நிலையில், ஓட்டுநரின் முகம் மற்றும் விரல்களில் கண்ணாடிச் சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக ரேபிட் பஸ் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.








