மலேசிய சிறைச்சாலைகள் துறையின் புதிய தலைமை ஆணையராக, அதன் துணைத் தலைமை ஆணையர் ஹாஃபிஸ் ஒத்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் நாளை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் வான் அஹ்மாட் டஹ்லான் அப்துல் அஸிஸ் அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் அப்பதவியில் இருந்த அப்துல் அஸிஸ் அப்துல் ரஸாக்கிற்கு பதிலாக அவர் பொறுப்பேற்கிறார்.
யுனிவெர்சிட்டி தெக்னொலொஜி மாராவில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற ஹாஃபிஸ் ஒத்மான், 32 ஆண்டுகால பணியனுபவம் கொண்டவர்.
மிரி சிறைச்சாலையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய அவர், சிரம்பான் சிறைச்சாலை, நெகிரி செம்பிலான் சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் துறையின் நிர்வாகப் பிரிவு துணைத் தலைமை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








