Nov 4, 2026
Thisaigal NewsYouTube

சிகரெட் கடத்தல் உதவிகளுக்காக போலீசாருக்கு 1 மில்லியன் லஞ்சம் - 'டத்தோ' உட்பட மூன்று பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிகரெட் கடத்தல் உதவிகளுக்காக போலீசாருக்கு 1 மில்லியன் லஞ்சம் - 'டத்தோ' உட்பட மூன்று பேர் கைது

கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிகரெட் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, போலீஸ் அதிகாரிகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில், டத்தோ பட்டம் பெற்ற தொழிலதிபர் உட்பட மூவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வெளியிட்ட தகவலின்படி, சிகரெட் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக போலீசார் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கு, இந்த லஞ்சப் பணத்தை இடைத்தரகர்களாக இருந்து இவர்கள் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் டத்தோ பட்டம் பெற்ற ஆண் தொழிலதிபர், தனியார் பயிற்சி ஆசிரியையாகப் பணியாற்றும் பெண் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரியாகப் பணியாற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவர்.

இவர்களின் வயது 30 முதல் 50 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி மாலை 4 மணியளவில் புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் தனித்தனியாக மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, எஸ்பிஆர்எம் விடுத்த மனுவைத் தொடர்ந்து, நவம்பர் 2 முதல் 5-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்ரின் ஸாகாரியா உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →