Nov 4, 2026
Thisaigal NewsYouTube

மெடிஅசாஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேற்பார்வையிட சுயாதீன வாரியம்: ஜனவரியில் நாடெங்கிலும் அறிமுகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மெடிஅசாஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேற்பார்வையிட சுயாதீன வாரியம்: ஜனவரியில் நாடெங்கிலும் அறிமுகம்

மெடிஅசாஸ் (MediAsas) மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் நாடு தழுவிய அளவில் ஜனவரி மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சுயாதீன வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அமலாக்கம், நிர்வாகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை இந்த வாரியம் கண்காணிக்கும் என்று தனியார் மருத்துவச் செலவுகளுக்கான கூட்டு அமைச்சரவைக் குழுவான ஜேபிஎம்கேகேஎஸ் (JBMKKS) தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதுடன், திட்டத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்கள் எளிதில் மருத்துவப் பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்ய மருத்துவத் துறை மற்றும் தொழில்துறை நிபுணத்துவம் ஒருங்கிணைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவச் சேவையும் சிகிச்சைப் பலன்களும் கிடைப்பதே சுகாதாரச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், மெடிஅசாஸ் திட்டம் அந்த நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதில் புதிய வாரியம் முக்கியப் பங்காற்றும் என்றும் இன்று புதன்கிழமை வெளியிட்ட நிதி மற்றும் சுகாதார அமைச்சுகளின் கூட்டறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →