முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக், தமது வீட்டுக் காவல் அனுமதி தொடர்பாக, விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று செலுத்துவாரா? என்பது குறித்து தமக்கு இதுவரை எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்களில் பரவி வரும் இந்த செய்தியை செய்தியாளர்களே உருவாக்கியிருக்கலாம் என்று நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நஜிப் தமது அபராதத் தொகையைச் செலுத்துவார் என்றும், அதன் மூலம் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அவருக்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், அவரது பிரதிநிதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் அபராதத் தொகையைச் செலுத்துவார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.








