‘கார்பரேட் மாஃபியா’ மற்றும் அமைச்சர் ஒருவர் குறித்து வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக பெர்சாமா கட்சித் தலைவர் ரஃபிஸி ரம்லி போலீசாரால் விசாரணை செய்யப்படவுள்ளார்.
அவதூறு மற்றும் பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டதாகக் கூறி அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநராக இன்று மீண்டும் பணிக்குத் திரும்பிய ஷுஹைலி ஸையின் குறித்து ரஃபிஸி தெரிவித்த கருத்துகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இது குறித்து ரஃபிஸி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.








