Nov 2, 2026
Thisaigal NewsYouTube

ரிம 1.93 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு – நாடெங்கிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிம 1.93 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு – நாடெங்கிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை நாடெங்கிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1.93 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திரவ மற்றும் திட வகை போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக புக்கிட் அமான் அறிவித்துள்ளது.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் வெளியிட்டுள்ள தகவலில், இக்காலகட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 536 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 37.3 டன் போதைப்பொருட்கள், 1.71 பில்லியன் ரிங்கிட் மதிப்புடையவை என்றும், அவை ஏற்கெனவே அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், 37.3 டன் அளவிலான பல்வேறு வகை போதைப்பொருட்களும் கடந்த 2009 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →