Nov 2, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் வெள்ளத்தில் சிக்கிய மினி கூப்பர் கார் – பெண் பாதுகாப்பாக மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் வெள்ளத்தில் சிக்கிய மினி கூப்பர் கார் – பெண் பாதுகாப்பாக மீட்பு

கோலாலம்பூரில் பெய்த கனமழையால் பந்தாய் பஹாரு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மினி கூப்பர் இரக காருக்குள் இருந்த பெண் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

இது குறித்து பிற்பகல் 3.30 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜாலான் பந்தாய் பஹாரு பகுதியில் உள்ள பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், காருக்குள் சிக்கிய அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அதேவேளையில் ஷா ஆலாம், சுபாங் பெர்மாத்தா பகுதியில் சுமார் 111 சதுர மீட்டர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும், டெனாய் ஆலாம், டிடிடிஐ, புக்கிட் ஜாலில், யுஎஸ்ஜே மற்றும் ஃபெடரல் ஹைவே உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளநீர் உயர்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →