Nov 2, 2026
Thisaigal NewsYouTube

சீன நாட்டவர்கள் மூலம் பினாங்கு வழியாக ஹாங்காங்கிற்கு கொக்கைன் கடத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீன நாட்டவர்கள் மூலம் பினாங்கு வழியாக ஹாங்காங்கிற்கு கொக்கைன் கடத்தல்

மலேசியாவில் இருந்து பினாங்கு வழியாக ஹாங்காங்கிற்கு கொக்கைன் போதைப்பொருளைக் கடத்துவதற்காக சீன நாட்டவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஹுசைன் ஓமார் கான் கூறுகையில், ஒரே மாதிரியான கடத்தல் முறையில் சீன நாட்டவர்கள் தொடர்புடைய மூன்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வரும் அவர்கள், அங்கிருந்து பினாங்கு சென்று, பின்னர் மற்றொரு விமானம் மூலம் ஹாங்காங்கிற்குப் பயணிப்பதாக அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இக்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக மூன்று கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் ஹாங்காங் அதிகாரிகளாலும், ஒருவர் பினாங்கிலும் கைது செய்யப்பட்டதாகவும் ஹுசைன் ஓமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →