Nov 2, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் 22 கி.மீ மூடப்பட்ட நடைபாதைகள் அமைக்கத் திட்டம் - அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் 22 கி.மீ மூடப்பட்ட நடைபாதைகள் அமைக்கத் திட்டம் - அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

கோலாலம்பூர் மாநகர் முழுவதும் 55 மில்லியன் ரிங்கிட் செலவில் 22 கிலோமீட்டர் நீளத்திற்கு மூடப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டுமானப் பணிகள் 2027 -ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தலா 2 கிலோமீட்டர் நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

மேலும், நகர மையத்தில் பொதுப் போக்குவரத்து நிலையங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் பூங்காக்களை இணைக்கும் வகையில் கூடுதலாக 20 கிலோமீட்டர் மூடப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

அதேவேளையில், குடியிருப்புப் பகுதிகள், பேருந்து நிறுத்தங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இணைப்பதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லவும், தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் இத்திட்டம் ஊக்கமளிக்கும் என அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →