Nov 2, 2026
Thisaigal NewsYouTube

ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பதவிக்கு புதிய நியமனம் இன்னும் முடிவாகவில்லை – சைஃபுடின்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பதவிக்கு புதிய நியமனம் இன்னும் முடிவாகவில்லை – சைஃபுடின்

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பதவிக்கு டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையினுக்குப் பதிலாக புதியவர் நியமிப்பது குறித்து இதுவரை ஆலோசிக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முஹமட் ஷுஹைலி மீண்டும் அரச மலேசிய போலீஸ் படைக்கு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நியமனம் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை என்றார்.

மேலும், நீதிமன்ற்த்தில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், அரசுப் பணியாளர் சேவை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →