Nov 3, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

2026-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் எனப்படும் சிஜில் பெலாஜாரான் மலேசியா ஆங்கிலப் பேச்சுத் தேர்வின் வினாக்கள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களைத் தேர்வுத்துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை தேர்வுத்துறை வெளியிட்ட முகநூல் பதிவில், பரவி வரும் தகவல்களை ஆய்வு செய்ததில், அவை பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டுத் தர ஆவணமான டிஎஸ்கேபி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பொதுவான கருப்பொருள்கள் மற்றும் கணிப்புகளின் பட்டியல் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வில் இடம்பெறும் கருப்பொருள்கள் அல்லது முக்கியச் சொற்களுடன் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் ஒத்துப் போவதால் மட்டும் வினாத்தாள் கசிந்து விட்டதாகக் கருத முடியாது என்றும் விளக்கமளித்துள்ளது.

ஒரே கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான வினாக்கள், சூழ்நிலைகள் மற்றும் தேர்வுப் பணிகளை உருவாக்க முடியும் என்றும் தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்