Nov 3, 2026
Thisaigal NewsYouTube

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீதான தேச நிந்தனை வழக்கில், சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசியில் விளக்க மனு ஒன்றைச் சமர்ப்பிக்க அவரது வழக்கறிஞர் குழு முடிவு செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நெங்கிரி இடைத்தேர்தல் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளே இந்த வழக்குக்குக் காரணமாகும்.

இவ்வழக்கு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான முஹிடின் யாசினின் வழக்கறிஞர் டத்தோ அமீர் ஹம்ஸா அர்ஷாட், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தனது கட்சிக்காரர் மேன்மை தங்கிய பகாங் மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷாவை அரண்மனையில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று அரண்மனையிலிருந்து கடிதம் ஒன்று தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தங்களது விளக்க மனுவை ஏஜிசி பரிசீலிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், விசாரணையைத் தொடங்குவதன் மூலம் ஏற்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றத்திடம் முஹிடின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் அஸ்லீனா ரஸ்டி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால், இன்று தொடங்கவிருந்த வழக்கு விசாரணையை நீதிபதி அஸ்லாம் ஸைனுடின் ஒத்திவைத்தார்.

மேலும், விளக்க மனுவின் நிலவரத்தைத் தெரிவிக்க இருதரப்பினரும் டிசம்பர் 3-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்