Nov 3, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மலேசியாவில் பிறந்து, உயிரியல் பெற்றோர் யார் என்பது அடையாளம் காணப்படாத குழந்தை ஒன்றிற்கு, சட்டப்படி மலேசியக் குடியுரிமை பெற உரிமை உண்டு என்று ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கில் அக்குழந்தை வேறொரு நாட்டின் குடிமகன் என்பதற்கான ஆதாரத்தை அரசாங்கத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என நீதிபதி மோசஸ் சூசையன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், குழந்தையைத் தங்களது சொந்தக் குழந்தையாகப் பதிவு செய்த தத்தெடுத்த தம்பதியினர், பின்னர் தேசிய பதிவிலாகாவின் விசாரணையில், அவர்கள் அக்குழந்தையின் உயிரியல் பெற்றோர் அல்ல என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பிறப்புப் பதிவிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், பதிவின் போது தவறான தகவல் வழங்கியதற்காகத் தத்தெடுத்த தாய் மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், அத்தம்பதி சட்டப்பூர்வமாகக் குழந்தையைத் தத்தெடுத்த போதிலும், பதிவிலாகா அக்குழந்தையை மலேசியக் குடிமகன் அல்லாதவர் எனப் பதிவு செய்திருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கைவிடப்பட்ட குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், உயிரியல் பெற்றோரைக் கண்டறிய முடியாத குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி தமது 25 பக்கத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குழந்தையின் பிறப்புப் பதிவுகளைத் திருத்தி, மலேசியக் குடியுரிமையுடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் மற்றும் மைகாட் அடையாள அட்டையை 30 நாட்களுக்குள் வழங்குமாறு தேசிய பதிவிலாகாவிற்கும், அரசாங்கத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியவர்கள் செய்த தவறுகளுக்காகக் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்

சுங்கை பூலோவில் கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு - அமைச்சர் ரமணன் தகவல்