Nov 3, 2026
Thisaigal NewsYouTube

28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம2.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு – 25% உயர்த்த குமரன் கிருஷ்ணன் கோரிக்கை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம2.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு – 25% உயர்த்த குமரன் கிருஷ்ணன் கோரிக்கை!

பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கான வருடாந்திர அடிப்படை நிதி ஒதுக்கீட்டை ரிம2 மில்லியனிலிருந்து ரிம2.5 மில்லியனாக உயர்த்த வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.

பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய அவர், கூடுதலாக ரிம500,000, அதாவது 25 விழுக்காடு நிதி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றார்.

பல தமிழ்ப்பள்ளிகள் பழமையான கட்டடங்களில் இயங்கி வருவதால், கட்டடப் பாதுகாப்பு, மின்சார வயரிங், கூரை, கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் தேவைகள் குறித்த ஆய்வு நடத்தி, பழுதுபார்ப்புப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட முன்னேற்றம் தொடர்பான வெளிப்படையான அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்றார்.

இதனிடையே, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் டெக் டோம் பினாங்குக்கு ரிம850,000, பினாங்கு ஸ்டெம் அமைப்புக்கு ரிம700,000 ஒதுக்கப்பட்டுள்ளதையும் வரவேற்றார்.

குறிப்பாக, B40 மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளில் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், பயிற்சிக்குப் பின்னர் வேலை வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குமரன் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மலேசியாவில் பிறந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்குக் குடியுரிமை: ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயிக்கை இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதில்லை: மலேசியா திட்டவட்டம்

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி

திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கா? - சுகாதார அமைச்சுக்கு மருத்துவ சங்கம் கேள்வி