May 5, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்தது
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்தது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.09-

சந்தை எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக இருந்ததைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு உயர்வுடன் வர்த்தகமானது. இது உள்நாட்டுப் பொருளாதாரம் உறுதியான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை இருந்த 3 ரிங்கிட் 94 சென் என்ற நிலையிலிருந்து 0.33 சதவீதம் உயர்ந்து, டாலருக்கு எதிராக 3 ரிங்கிட் 93 சென் ஆக நிலைபெற்றது.

இது குறித்து Bank Muamalat மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid கூறுகையில், தாய்லாந்து மற்றும் ஜப்பானின் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆசியாவில் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் சாதகமான சூழல், ஆசிய நாணயங்களின் மதிப்பை உயர்த்தியுள்ளது. எனவே, வரும் காலங்களில் ரிங்கிட் தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்றார்.

Related News