கோலாலம்பூர், ஜூலை.16-
நாட்டில் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வரும் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் இன்று தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில் தொடங்கிய 269 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் இவ்விரு முக்கியப் பதவிகளும் நிரப்பப்படுவதற்கு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜுலை 2, 3 ஆகிய தேதிகளில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் மற்றும் முன்னாள் அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவது குறித்து இன்றைய ஆட்சியாளர் மாநாட்டில் முடிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.








