Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் சட்டவிரோதமாக நுழைந்த 25 மியான்மர் நாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் சட்டவிரோதமாக நுழைந்த 25 மியான்மர் நாட்டினர் கைது

Share:

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 25 மியான்மர் நாட்டினரை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி முகமையினர் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர். காலை 3.30 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சுமார் 4.25 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது 12 முதல் 42 வயதுக்குட்பட்ட அந்த மியான்மர் நாட்டினரை அதிகாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். .

பினாங்கு, பெனாகாவில் உள்ள குவாலா மூடா நதி முகத்துவாரத்தை நோக்கி அதிவேகமாக வந்த சந்தேகத்திற்குரிய fiber படகு ஒன்றை ரோந்துப் படகு பின்தொடர்ந்தபோது, அந்தப் படகு பயணிகளை கடற்கரையில் இறக்கிவிட்டு தப்பியோடியது. கடற்கரையில் இறக்கிவிடப்பட்ட மியான்மர் நாட்டினரை அழைத்துச் செல்வதற்காக அங்கு ஒரு லாரி காத்திருந்ததையும் அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

முறையான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது மற்றும் அங்கீகரிக்கப்படாத வழித்தடங்களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குனர் கமது சுஃபி முகமது ராம்லி தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்