Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ 2-இல் இருந்து விழுந்து அல்ஜீரிய நபர் பலி: போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ 2-இல் இருந்து விழுந்து அல்ஜீரிய நபர் பலி: போலீஸ் தகவல்

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், வெளிப்புற பால்கனி பகுதியிலிருந்து விழுந்து 30 வயதுடைய அல்ஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக கே.எல்.ஐ.ஏ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் எம்.ரவி தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினர் அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக சைபர்ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

"இருப்பினும், கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை மருத்துவமனை உறுதி செய்தது," என்று எம். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தற்போது 'திடீர் மரணம்' எனப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இதே போன்று சீன நாட்டை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் இதே முனையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை