ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-
ஜோகூரைச் சேர்ந்த 55 வயதான பெண் வர்த்தகர் ஒருவர் போலி முதலீட்டு மோசடியில் சிக்கி சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலமாக மோசடிக் கும்பலின் சதி வலையில் சிக்கியிருக்கிறார் என பத்து பாஹாட் காவல்துறை தலைமை துணை ஆணையர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 10-ம் திகதி முதல் 31 திகதி வரை, 3 வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமாக பணப் பரிமாற்றம் செய்த அப்பெண், தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பிறகே மோசடியில் சிக்கியதை உணர்ந்திருக்கிறார் என்றும் ஷாருலனுவார் குறிப்பிட்டுள்ளார்.








