Feb 8, 2026
Thisaigal NewsYouTube
கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சின் 2026-2030 வியூகத் திட்டம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சின் 2026-2030 வியூகத் திட்டம் அறிமுகம்

Share:

கோலா நெருஸ், பிப்ரவரி.08-

கிராமப்புற, வட்டார வளர்ச்சி அமைச்சு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கிராமப்புற மேம்பாட்டு இலக்குகளை உள்ளடக்கிய '2026-2030 வியூகத் திட்டத்தை' அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. நாட்டின் 24 விழுக்காடு மக்களான சுமார் 8. 17 மில்லியன் கிராமப்புறவாசிகள் பயன் பெறும் வகையில், 20 உத்திகளும் 49 முன்முயற்சிகளும் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறப் பொருளாதாரம், மனித மூலதனம், உள்கட்டமைப்பு, கிராமப்புற தொழில்முனைவோர், சேவை வழங்கல் முறை ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் இத்திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது.

கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலத்தில் கிராமப்புற வறுமை விகிதம் 12.9 விழுக்காட்டிலிருந்து 9.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக் காட்டிய துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, புதிய திட்டம் இந்த வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்றார். கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வது 0.5 விழுக்காடாகக் குறைந்துள்ளதும், தொழில்நுட்பக் கல்வி (TVET) பட்டதாரிகளின் வேலை வாய்ப்புத் திறன் 98.7 விழுக்காட்டை எட்டியுள்ளதும் அமைச்சின் முந்தைய சாதனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து