Jun 26, 2026
Thisaigal NewsYouTube
10A மாணவர்கள் விவகாரம்: அரசாங்கம் வாக்குறுதியை மீறவில்லை - வோங் கா வோ விளக்கம்
தற்போதைய செய்திகள்

10A மாணவர்கள் விவகாரம்: அரசாங்கம் வாக்குறுதியை மீறவில்லை - வோங் கா வோ விளக்கம்

Share:

கோலாலம்பூர், மே.05-

எஸ்பிஎம் தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குவதில் அரசாங்கம் வாக்குறுதியை மீறி விட்டதாக மசீச. தலைவர் வீ கா சியோங் கூறிய குற்றச்சாட்டை கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ மறுத்துள்ளார். இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் அவதூறானது என்று அவர் வர்ணித்துள்ளார்.

வீ கா சியோங் குறிப்பிட்ட 11 மாணவர்களும் ஏற்கனவே மெட்ரிகுலேஷன் இடங்களைப் பெற்று விட்டதை அமைச்சின் சரிபார்ப்பு உறுதிச் செய்துள்ளதாக வோங் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதியும், மீதமுள்ள 10 பேர் ஏப்ரல் 29-ஆம் தேதியும் தங்களின் சேர்க்கை அறிவிப்புக் கடிதத்தைப் பெற்றுள்ளனர்.

முடிவுகளை மறுபரிசீலனை செய்த பிறகு 10A பெற்ற மாணவர்களின் தரவுகள் இறுதியாவதில் ஏற்பட்ட கால தாமதமே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று வோங் கா வோ விளக்கமளித்தார்.

10A பெற்ற மாணவர்களுக்குத் தானியங்கி முறையில் இடங்கள் வழங்கப்படும் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்